Tamilwin RSS Feeds - Latest News

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

யாழ்.பொது நூலக சிறுவர் பகுதி புனரமைப்பிற்கு 3 மில்.டொலர் ஒதுக்கீடு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-11 08:09:00| யாழ்ப்பாணம்]

யாழ்.பொது நூலக சிறுவர் பகுதி புனரமைப்பு பணிக்கென சிங்கப்பூர் இன்ரநேசனல் பவுண்டேசன் நிறுவனம் மற்றும் தேசிய நூலக சபையினால் 3 மில்லியன் சிங்கப்பூர் டொலர் வழங்கப் படவுள்ளதாக யாழ்.பொது நூலக நூலகர் எஸ்.தனபாலன் தெரி வித்துள்ளார். யாழ்.பொது நூலக சிறுவர் பகுதி புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதையடுத்து நேற்று நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வை.ஜோ அண்மையில் யாழ். வருகை தந்த போது யாழ்.மாநகரசபை முதல்வர் திருமதி. யோ.பற்குணராசாவால் பொதுநூலக சிறுவ [மேலும் வாசிக்க...]
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-10 07:06:41| யாழ்ப்பாணம்]
யாழ்.சமூக செயற்பாட்டு மையத் தால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் யாழ்.மா வட்டத்தில் உள்ள சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தெல்லிப்பழை உடுவில் சண்டிலிப்பாய் பருத்தித்துறை சாவகச்சேரி தீவகம் வேலணை போன்ற பிரதேச செயலர் பிரிவுகளில் மேற்படி செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் எதிர்வரும் 12த 13 ஆம் திகதிகளில் பருத்தித்துறை சக் கோட்டையிலுள்ள சென்சேவியர் ஆலய மண்டபத்தில் நாடகம் மூலம் விழிப் புணர்வு செயற்பாடுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும் வாசிக்க...]
குற்றவாளிகள் போல் நடத்தப்படும் யாழ்ப்பாணத்திலுள்ள பொதுமக்கள் - விநாயகமூர்த்தி எம்.பி. குற்றச்சாட்டு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-09 07:45:41| யாழ்ப்பாணம்]
யாழ்ப்பாணத்தில் மக்கள் குற்ற வாளிகளைப் போல நடுத்தெருவில் நிறுத்தப்பட்டு படையினரால் புகைப் படம் எடுக்கப்படுகிறார்கள்.இதனால் மக்கள் அச்சத்தில் வாழ்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கே.பிக்கு சுதந்திரமாக வாழ அரசாங்கம் இடமளிக்குமானால், சிறு குற்றங்கள் இழைத்தோரை ஏன் விடுதலை செய்ய முடியாது? ரவிராஜ்,ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோர் அரச பயங் கரவாதிகளால் தான் க� [மேலும் வாசிக்க...]
தனியார் நிறுவனங்கள் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் - யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-08 10:25:23| யாழ்ப்பாணம்]
அரச நிறுவனங்கள் மட்டுமல் லாது தனியார் நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க் கைத்தரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என யாழ்.அரசஅதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

டச் வூட் நிறுவனத்தின் கிளை நேற்று நாவலர் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக் கையில், தனியார் நிறுவனங்கள் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். யாழ். மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சிலமாதங்களாக பல அசம் பாவிதங்கள் இடம் பெற்று வரு கின்றன. இந்த நிலை தற்போது க� [மேலும் வாசிக்க...]
சீமெந்து கலவை இயந்திரம் வெடித்து எட்டுப் பேர் காயம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-08 09:41:40| யாழ்ப்பாணம்]
யாழ்.கே.கே.எஸ். வீதியில் கட்டிட நிர்மாணப் பணியில் பயன்படுத்தப்பட்ட சீமெந்துக் கலவை இயந்திரத்தின் குழாயில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக பணியாளர்கள் எட்டுப் பேர் காயம டைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முற்பகல் 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களின் விபரம் வருமாறு, ஆசிம் நியாஸ் (31)-புத்தளம்,அப்துல் ரகு மான் (21)- அனுராதபுரம்,ஆர்.அஸ்கர் (23)- புத்தளம்,எச்.எம்.சுமித் (26)-புத்தளம், எச்.ஏ.காலும் மதுரங்க (17)- புத்தளம், டி.பி.கமல் சிறி (40)- புத்தளம், எஸ்.நிகால் (32),முகமட் ஜெனால் (43)- புத்தளம். [மேலும் வாசிக்க...]
ஆங்கில வகுப்பை ஆர்வமுள்ளதாக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஆசிரியர்கள் மத்தியில் துணைவேந்தர் உரை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-06 09:03:50| யாழ்ப்பாணம்]
ஆங்கில வகுப்பை ஆர்வமுள்ள வகுப் பாக்கும் திறனை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். மாணவர்களின் ஆர் வத்தினை தூண்டி ஆங்கிலத்தைக் கற் பிக்கும் வல்லமை வசப்பட வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆங் கில ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே துணைவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, ஆங்கில ஆசிரியர்களுக்கான இந்த சிறப்பு கற்கை � [மேலும் வாசிக்க...]
உண்டியல் உடைத்து திருடிய மூவர் கைது
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-06 08:55:01| யாழ்ப்பாணம்]
ஊர்காவற்றுறை மொழிஞ்சிமுனை வேளாங்கன்னி மாதா ஆலய உண்டியலை பட்டப்பகலில் உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை 10மணியளவில் உண்டி யல் உடைக்கப்பட்டதை அவதானித்த மக்கள் அதனுடன் தொடர்புடைய மூவரை பிடித்து ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மூவரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். [மேலும் வாசிக்க...]
மோட்டார் பூட்டிய அனைத்து வாகனங்களும் பதியப்பட வேண்டும்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-04 07:15:33| யாழ்ப்பாணம்]
மோட்டார் பூட்டிய அனைத்து வாகனங் களும் பதிவு செய்யப்பட வேண்டும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.இதனடிப்படையில் அவ் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வாகன சாரதி அனுமதிப்பத்திரமும் பெறப்பட வேண் டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் மோட்டார் வாகன விற்பனை நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.49சிசி மோட்டார் சைக் கிள்களும் பதிவு செய்யப்பட்டு சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும் வாசிக்க...]
தேசிய தமிழ்மொழித்தினப் போட்டி பரிசளிப்பு விழா யூலை 19இல்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-02 10:09:08| யாழ்ப்பாணம்]
2011ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி களின் பரிசளிப்புவிழா யூலை 19ஆம் திகதி விபுலானந்தர் நினைவு தினத் தில் நடத் தப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வடக்குமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ் வரன் தகவல் தருகையில்,

2011ஆம் ஆண்டுக்கான தமிழ்த் தினப் போட்டிகளை நடத்துவது தொடர் பில் கல்வியமைச்சின் தமிழ்மொழி பிரிவு நேற்றுமுன்தினம் விசேட கூட் டம் ஒன்றை நடத்தியது.இதில் இந்த ஆண்டிற்கான தேசிய மட்ட தமிழ் மொழித்தின போட்டிகளின் பரிசளிப்புவிழாவை விபுலானந்தர் நினைவு தினமான ஜூலை 19ஆம் திகதி நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.< [மேலும் வாசிக்க...]
வட. மாகாணக் கல்வி அபிவிருத்திக்கு 310 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு - மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-02 10:07:35| யாழ்ப்பாணம்]
வடக்கு மாகாண கல்வி அபிவிருத்திக்கு இவ் ஆண்டு 310 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,

இவ் ஆண்டிற்கான கல்வி அபி விருத்திப் பணிகளுக்கு 310.5மில்லி யன் ரூபாய் நிதி வடக்கு மாகாண சபையினால் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் 200மில்லியன் ரூபாயும், நவோ தயா திட்டத்தில் 30மில்லியன் ரூபாயும்,உலக வங்கியின் வருடார்ந்த நிதி வழங்கலில் 80.5 மில்லியன் ரூபாயும் அடங்குகின்றன.

இதனைவிட அறிவுசார் கல்வி செயற்திட்� [மேலும் வாசிக்க...]
நெல்லியடியில் விபத்து குடும்பஸ்தர் பலி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-02 09:33:48| யாழ்ப்பாணம்]
பருத்தித்துறை- நெல்லியடி பிர தான வீதி தெருமூடி மடத்தடியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தர் கனரக வாகனம் ஒன்று டன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 12.30 மணிய ளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் தம்பசிட்டி வீதி, புலோலியைச் சேர்ந்த செல்லையா தெய்வேந்திரன் (வயது -49) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

பருத்தித்துறை- நெல்லியடி பிர தான வீதியில் துவிச்சக்கர வண்டி யில் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரஸ்தாப குடும்பஸ்தர் கனரக வாகனத்துடன் மோதுண்டு படுகாயமடைந்துள்ளா� [மேலும் வாசிக்க...]
றோலர் படகு மூலம் மீன்பிடிக்க அனுமதி
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-01 07:55:26| யாழ்ப்பாணம்]
கடந்த ஒரு மாத காலமாக றோலர் படகு மூலம் கடற்றொழில் செய்ய குரு நகர் பகுதியில் தடை செய்யப்பட்டு இரு ந்தது. தற்போது மீண்டும் இவ்வாரம் முதல் அனுமதி வழங்கப்பட்டு வழமை போல் நடைபெற்று வருகின்றது.

மேலும் சிறு தொழிலாளருக்கு பாதிப்பு ஏற்படாமல் கரையை அண்டிய பகு திகளில் தொழில் முறைகளை மேற் கொள்ளாது ஆழ்கடலில் றோலர் படகு மூலம் தொழில் செய்யலாம் என்றும் கிழமைக்கு மூன்று நாள் மட்டும் இத் தொழிலில் ஈடுபடலாம் என்றும் தெரிவி க்கப்படுகின்றது. [மேலும் வாசிக்க...]
அராலியில் திருட்டு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-01 07:45:32| யாழ்ப்பாணம்]
அராலி வடக்கு செட்டியார் மடத்தில் நேற்று முன்தினமிரவு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் வீட்டில் உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளை வீட்டு முன் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் 2 வீடியோ கமரா, கையடக்கத் தொலைபேசி ஒன்று, 2பவுண் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய் யப்பட்டுள்ளது. [மேலும் வாசிக்க...]
மாலை 6 மணிக்குப் பின் கூட்டமாக நிற்கத் தடை
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-31 07:55:16| யாழ்ப்பாணம்]
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக் குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக் குப் பின் வீதிகளில் கூடும் இளை ஞர்கள் கைது செய்யப்படுவார்கள் என சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக பண்டார அறிவித்துள்ளார்.

சுன்னாகம் பகுதிகளில் அதிகளவான திருட்டுச் சம்பவங்கள் இடம் பெறுவதாக முறையிடப்பட்டுள்ளது. இவற்றைத் தடுப்பதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக பொது மக் களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத் தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்திக பண்டார மேலும் கூறியதா வது, சந்� [மேலும் வாசிக்க...]
வயோதிபத் தம்பதியினர் மீது புங்குடுதீவில் தாக்குதல்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-30 11:25:26| யாழ்ப்பாணம்]
புங்குடுதீவு 10வட்டாரத்திலுள்ள வீட்டில் தனித் திருந்த வயோதிப தம்பதிகள் இருவர் இனந் தெரியா தோரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம் பெற்றுள்ளது.இதில் சுவாமிநாதன் (வயது 72), அவரது மனைவி வரதலக்சுமி (வயது 65) ஆகிய இருவருமே தாக்கப்பட்டவர்களாவர். நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்ற நால்வரே இவர்களைத் தாக்கியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஊர் காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் நேற்றுக்காலை மீட்கப்பட்ட� [மேலும் வாசிக்க...]
மோ.சைக்கிள் விபத்து வயோதிபர் படுகாயம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-29 07:14:34| யாழ்ப்பாணம்]
மோட்டார் சைக்கிள் மோதியதில் கால் முறிவடைந்த நிலையில் வயோதிபர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் வியாழக் கிழமை இரவு 8மணிக்கு சாவகச்சேரி பெருங் குளத்தில் நடைபெற்றது. இவ்விபத்தில் கண்டிவில் லேன், தபால் கந்தோர் வீதி,சாவகச்சேரியைச் சேர்ந்த செல் லையா நமசிவாயம் (வயது 74)என்பவரே கால் முறிவடைந்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [மேலும் வாசிக்க...]
தற்காலிக இடமாற்றம் - வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகம் யாழ்ப்பாண கல்வி வலயத்தில் இயங்கும்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-29 07:13:43| யாழ்ப்பாணம்]
வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அலுவலகம் அடுத்த வாரம் முதல் யாழ்ப்பாண வலயக்கல்வி அலுவலகக் கட்டிடத் தொகுதியில் தற்காலிகமாக இயங்கவுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அலுவலகத் தகவல்களிலிருந்து தெரியவருவதாவது,

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல் கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு திருகோணமலையிலுள்ள தனது அலுவல கத்தை அடுத்த மாதம் முதல் மருதனார்மடம் வலிகாமம் வலயக் கல்வி அலுவலக கட்டிடத் தொகுதியின் மேற்தளத்தில் புதிதாக அமைக் கப்படும் அலுவலகத்திற்கு மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்தது.

கடந்த 19ஆ� [மேலும் வாசிக்க...]
மோ.சைக்கிள் விபத்து மாணவன் படுகாயம்
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-28 07:43:10| யாழ்ப்பாணம்]
மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

இச்சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த ஆனந்தராஜா சுஜந்தன் (வயது 7) என்ற மாணவன் பாடசாலைக்கு செல்லும் வழியில் விபத்துக்குள்ளானார்.தலையில் பலத்த காயத்துக்குள்ளான அவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [மேலும் வாசிக்க...]
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கடிதங்களை மருதனார்மடத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-25 07:40:09| யாழ்ப்பாணம்]
வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் மருதனார்மடத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனது அலுவலகப் பணிகளை ஆரம் பிக்கவுள்ளது.

எனவே கடிதம் மூலம் தமது தேவைக ளைப் பூர்த்திசெய்ய விரும்புபவர்கள் முதலாம் திகதி முதல் மருதனார்மடம் அலுவலகத்தில் சேவையைப் பெற்றக்கொள்ள முடியும் என வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் ப.விக் னேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது, வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தனது அலுவலகப் பணிகளை எதிர்வரும் முதலாம் திகதி முதல் மருதனார்மடத்தில் ஆரம்பிக்கிறது.

இந்நிலையில் திருகோணமலை அலுவ லகத்திலிருந [மேலும் வாசிக்க...]
ஆயிரம் பாடசாலைத் திட்டம் அபிவிருத்திக் கூட்டம் இன்று
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-25 07:38:46| யாழ்ப்பாணம்]
ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசா லைகளின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று காலை வவுனியா முதல்நிலை அலு வலகத்தில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் வடக்கு மாகாணத்தில் 2011 ஆம் ஆண்டிற்கான மாவட்டங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்றம் தொடர் பில் ஆராயப்படும் என தெரியவருகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசா லைகளின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று வடக்கு மாகாண முதல்நிலை அலுவ லகத்தில் இடம்பெறவுள்ளது.இக் கூட்டத்திற்கு வலயக் கல� [மேலும் வாசிக்க...]

ஞாயிறு, 23 ஜனவரி, 2011



இலங்கை மீதான குற்றச்சாட்டு குறித்து ஐ.நா. பேச்சாளர் பதிலளிக்க மறுப்பு
24 ஜனவரி 2011, திங்கள் 5:10 மு.ப
யுத்தத்தின் இறுதிப் பகுதி யில் இலங்கையில் 40 ஆயி ரம் பொதுமக்கள் கொல்லப் பட்டனர் என்று தெரிவிக்கப் படும் குற்றச்சாட்டுக்கள் தொடர் பாக ஊடகங்கள் பல வாரங் களாக எழுப்பிவரும் கேள்வி களுக்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார் டின் நெஸ்கி பதிலளிப்பதைத் தவிர்த்து வருகின்றார் என்று \"இன்னர் சிற்றி பிரஸ்\' இணை யத் தளம் குற்றஞ்சாட்டி உள் ளது.   மேலும்...
நிருபர் :ஆசிரியர் , யாழ்பார்வை : 5கருத்து :0
அரசு - கூட்டமைப்பு இடையிலே பேச்சுக்கான பேச்சே நடக்கிறது
\"\"தமிழர் தாயகப் பிரதேசம், தமிழினத்திற்கான அரசியல் தீர்வு என்ற விடயங்களில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லாத நிலையிலேயே இலங்கை அரசுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடும். மேலும்...
 
மீனவரைச் சுடுவதை நிறுத்துங்கள் இலங்கையிடம் இந்தியா காட்டம்
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது என்று இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இலங்கைக் கடற்படை அத்தகைய செயல்களை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும்...
பிந்திய செய்திகள்
மீனவரைச் சுடுவதை நிறுத்துங்கள் இலங்கையிடம் இந்தியா காட்டம் 
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது என்று இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இலங்கைக் கடற்படை அத்தகைய செயல்களை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.   மேலும்...
24 ஜனவரி 2011, திங்கள் 5:30 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 0   கருத்து: 0
மீனவரைச் சுடுவதை நிறுத்துங்கள் இலங்கையிடம் இந்தியா காட்டம் 
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது என்று இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இலங்கைக் கடற்படை அத்தகைய செயல்களை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.   மேலும்...
24 ஜனவரி 2011, திங்கள் 5:30 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 0   கருத்து: 0
மீனவரைச் சுடுவதை நிறுத்துங்கள் இலங்கையிடம் இந்தியா காட்டம் 
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது என்று இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இலங்கைக் கடற்படை அத்தகைய செயல்களை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.   மேலும்...
24 ஜனவரி 2011, திங்கள் 5:30 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 0   கருத்து: 0
யாழில் தனியார் கல்வி நிறுவனம் தீக்கிரை 
யாழ்.நகரை அண்மித்த கந்தர்மடம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று விஷமக்கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. யாழ். கந்தர்மடம் அரசடி வீதியிலுள்ள யூனிவேர்சல் என்ற தனியார் கல்வி நிறுவனமே நேற்றிரவு 8 மணியளவில் தீக்கிரையாக்கப் பட்டுள்ளது. யாழ். மாநாகர சபை தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்ட போதிலும் இரு கொட்டகைகளும், அதனுள் இருந்த தளபாடங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.  மேலும்...
23 ஜனவரி 2011, ஞாயிறு 11:55 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 213   கருத்து: 0
உதயன் உதவிக்கரம் கிழக்கு மக்களுக்கு [ photo  ]
கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டஉறவுகளுக்காக யாழ்.மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட உதவிப் பொருள்கள் நேற்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சேற்றுக்குடா கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.   மேலும்...
23 ஜனவரி 2011, ஞாயிறு 9:30 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 73   கருத்து: 0
கப்பலில் கனடா சென்றவர்களில் 15 பேர் வெளியேற்றப்படுவார்கள் 
சன்சீ கப்பல் மூலம் கடந்த ஓகஸ்ட் மாதம் கனடாவை சென்றடைந்தவர்களில் 15 பேர் போர்க்குற்றங்கள், தீவிரவாத செயல்கள் அல்லது ஆள்கடத்தல் சம்பவங் களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கனேடிய அரசஅதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.  மேலும்...
23 ஜனவரி 2011, ஞாயிறு 8:25 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 189   கருத்து: 0
இனி வரும்போது ஆடிப்பாடுவேன் என்கிறார் அமைச்சர் 
யாழ்.நகரில் மைத்திரிபால தெரிவிப்பு யாழ்ப்பாணத்துக்கு அடுத்த முறைவரும்போது ஆடிப்பாடி மகிழ்வேன் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.யப்பான் நாட்டின் நிதியுதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் நேற்று முன்தினம் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்  மேலும்...
23 ஜனவரி 2011, ஞாயிறு 8:00 மு.பஆசிரியர் , யாழ்பார்வை: 150   கருத்து: 0
ஏனைய செய்திகள்
 உதயன் உதவிக்கரம் கிழக்கு மக்களுக்கு
 கப்பலில் கனடா சென்றவர்களில் 15 பேர் வெளியேற்றப்படுவார்கள்
 இனி வரும்போது ஆடிப்பாடுவேன் என்கிறார் அமைச்சர்
 விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த நிறுவனங்களின் சொத்துகள் ரத்து
 அரசு கூட்டமைப்பு சந்திப்பு ஒத்திவைப்பு
 வேட்பு மனு விண்ணப்பத்துக்கு அரசு விதித்துள்ள நிபந்தனையால் முறுகல்
 மிகப் பழமை வாய்ந்த கோயில் கண்டுபிடிப்பு
 குடாநாட்டில் குற்றங்களைத் தடுக்க இராணுவத்தினர் இரவிலும் ரோந்து
 
இன்றைய சிந்தனை
வறுமை வறியவர்ளால் உருவாக்கப்படுவதில்லை - பொருளாதார நிபுணர்.முகமத் யூனுஸ்
புகைப்படங்கள்
காணொளிகள்
  • Achewood
  • Achewood
சிறப்பு கட்டுரைகள்
யாழ். குடாவை உய்யவிடாது தடுக்க....
பெரும் எண்ணிக்கையான இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் யாழ். குடாநாட்டுக்கு திரும்பியுள்ள போதும் மீண்டும் அவர்கள் சொந்த நிலங்களிலும் வீடுகளிலும் வாழ அனுமதிக்கப் படவில்லை. உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் அந்த மக்கள் தங்களின் சொந்த விவசாய நிலங்களில் பயிரிட்டு தமக்கான உணவுத் தேவையை நிறைவு செய்யவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.  மேலும்...
"ஜாவா இனப்படுகொலை", நெதர்லாந்து அரசின் போர்க்குற்றங்கள்
செப்டம்பர் 1947, இந்தோனேசியா, ஜகார்த்தா நகரில் இருந்து நூறு கி.மீ. தூரத்தில் உள்ள ராவகேடே கிராமம். மேஜர் வைனன் (Wynen) தலைமையிலான நெதர்லாந்து படைகள் கிராமத்தை சுற்றி வளைக்கின்றன. இந்தோனேசியாவை ஆக்கிரமித்த நெதர்லாந்து காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது.  மேலும்...
 
 
 
கருத்து சித்திரம்
கருத்துக் கணிப்பு
எமது இணையத்தளத்தில் நீங்கள் கூடுதலாக எதிபார்ப்பது...
யாழ். குடாநாட்டுச் செய்திகள்
இலங்கைச் செய்திகள்
பொருளாதாரச் செய்திகள்
விளையாட்டுச் செய்திகள்
மரணஅறிவித்தல்
பெயர்
இராசரத்தினம் தயானந்தம் (தவம்)
பிறந்த இடம்
வடலியடைப்பு
வாழ்ந்த இடம்
ஆறுகால்மடம்
பெயர்
சின்னத்தம்பி தில்லைநாதர்
பிறந்த இடம்
பூநகரி,
வாழ்ந்த இடம்
நீர்வேலி
பெயர்
ஐயம்பிள்ளை நவரத்தினம்
பிறந்த இடம்
சுன்னாகம்.
வாழ்ந்த இடம்
நினைவஞ்சலிகள்
பெயர்
மனோரஞ்சிதன் அருளரசன் (பிரஷாந்)
பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்