Tamilwin RSS Feeds - Latest News

திங்கள், 15 நவம்பர், 2010

(2ம் இணைப்பு)
ஸ்ரீ ரங்காவுக்கு அமைச்சுப் பொறுப்பு: புலிகள் வலையமைப்பின் முக்கிய தகவல்களை பெற உதவினாராம்
[ 2010-11-15 10:30:43 ] []
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது ஐ.தே.க. விலிருந்து அரசாங்கத்துக்குத் தாவிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவுக்கு அமைச்சர்; பொறுப்பொன்று அளிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது. அதற்கான சிபாரிசை ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார். [மேலும்]
(3ம் இணைப்பு)
தடுப்புக் காவலில் உள்ளோரின் பெயரை வெளியிடக்கோரி கையெழுத்து வேட்டை: யாழில் 50 பேர் கைது
[ 2010-11-15 07:54:31 ] []
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டுத்த தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர், விபரங்களை வெளியிடுமாறு கோரி கையெழுத்து வேட்டை நடத்திக் கொண்டிருந்த ஐம்பது பேரை யாழ்ப்பாணப் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
பிந்திய செய்திகள்
அவலங்களுக்குத் தீர்வு காண அரசாங்கம் தவறி வருகின்றது: சிறிதரன் எம்.பி.
[ 2010-11-15 20:29:26 ]
மீள்குடியேற்றம் இடம்பெறும் பகுதிகளில் மக்கள் சகஜ வாழ்விற்குத் திரும்ப முடியாதளவுக்கே சூழ்நிலைகள் உள்ளன.மனிதாபிமான நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்தே செல்கின்றன. [மேலும்]
ஆணைக்குழுவின் தலைவர் யுத்தகாலத்தில் தமிழ் மக்கள் பட்ட துயரங்களுக்காக மன்னிப்புக்கோர விரும்புவதாக தெரிவிப்பு
[ 2010-11-15 16:12:13 ]
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டபின்னர், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும், கடந்த கால கசப்புணர்வுகளுக்கான காரணங்கள் பற்றி ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு அமைக்கப்படுவதாகக் கூறி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வட பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் விசாரணைகளை நடத்தி முடித்துள்ளது. [மேலும்]
செய்திகள்
யுத்த நீதிமன்றத்தை அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றமாக ஏற்றுக் கொள்வதா?:ஐந்து நீதியரசர் குழாம் ஆய்வு
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 03:09.02 PM ]
யுத்த நீதிமன்றத்தை அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றமாக ஏற்றுக் கொள்வதா என்பது தொடர்பில் ஐவர் அடங்கிய நீதியரசர் குழுவொன்று ஆய்வு நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் அமைப்பிற்கு அமைய யுத்த நீதிமன்றத்தை ஓர் நீதிமன்றமாக ஏற்க முடியுமா என ஆராயப்படவுள்ளது. [மேலும்]
காணாமல் போனோர் தொடர்பில் வடக்கில் 500 முறைப்பாடுகள்: நல்லிணக்க ஆணைக்குழு
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 02:53.31 PM ]
காணாமல் போனோர் தொடர்பில் வடக்கில் 500 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. [மேலும்]
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு சரத் பொன்சேகா என்னை மிரட்டினார்: கிழக்கு மாகாண முதலமைச்சர்
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 02:24.36 PM ]
நாங்கள் புலிகள் அமைப்பை விட்டு விலகி மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்துக் கொண்டிருந்தபோது, அனைத்தையும் கைவிட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு 2008ம் ஆண்டில் சரத் பொன்சேகா என்னைக் கூப்பிட்டு மிரட்டினார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். [மேலும்]
யாழ்ப்பாணத்தில் பஸ்ஸொன்று கடலுக்குள் பாய்ந்துள்ளது: 28 பேர் காயம்
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 02:10.28 PM ]
யாழ்ப்பாணம் அராலித்துறையில் பஸ்ஸொன்று கடல் நீரேரிக்குள் (களப்பு) வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். [மேலும்]
திரைப்படக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் தேவதாசன் மகசீன் சிறையில் உண்ணாவிரதம்
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 01:54.27 PM ]
தேசிய திரைப்பட கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் 53 வயதான கனகசபை தேவதாசன் இன்று திங்கட்கிழமை முதல் புதிய மகசீன் சிறைச்சாலையில்(ஜே பிரிவு) சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். [மேலும்]
நிவாரணப் பணிகளில் தமிழர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கக் கூடாது: அரச சார்பற்ற நிறுவனங்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 01:46.00 PM ]
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளின் போது எல்லா அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழர்களை மட்டுமே முதன்மைப்படுத்தியே செயற்படுகின்றன. அதனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். [மேலும்]
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த யாரும் கொல்லப்படவில்லை: சவேந்திர சில்வா
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 01:29.17 PM ]
புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடனோ, இல்லாமலோ படையினரிடம் சரணடைந்த எவரையும் பாதுகாப்புப் படையினர் கொலை செய்யவில்லை என்று 58ம் படைப்பிரிவின் முன்னாள் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார். [மேலும்]
ஜேவிபி குழுவினர் மீதான தாக்குதல் அரசபயங்கரவாதத்தின் ஒரு வடிவம்: மனோ கணேசன்
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 11:06.43 AM ]
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் வீட்டில் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருந்த ஜேவிபி எம்பி சுனில் ஹதுன்னெட்டி உள்ளிட்ட குழுவினர் மீது நடத்தப்பட்டுள்ள வன்முறை தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவமாகும். இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். [மேலும்]
நீச்சல் தடாகத்தை திறக்க பல்கலைக்கழகம் வரும் ஜனாதிபதி : மாணவர்களின் எதிர்ப்பை அடக்க தயார் நிலையில் இராணுவம்
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 10:39.13 AM ]
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘மஹிந்த ராஜபக்ஷ நீச்சல் தடாகத்தை’ திறந்து வைக்கும் நிகழ்வுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகை தரவள்ள நிலையில், மாணவர்கள் அதனை எதிர்த்து வைபவத்தை பகிஷ்கரிக்கும் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். [மேலும்]
ஒருங்கிணைந்த புலனாய்வுப் பிரிவின் தலைவராக பேராசிரியர் ரொஹான் குணரத்தின..?
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 10:34.12 AM ]
பாதுகாப்பு அமைச்சின் கீழ் புதிதாக உருவாக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த புலனாய்வுப் பிரிவின் தலைவராக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொஹான் குணரத்தின நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது. [மேலும்]
அக்கரைப்பற்றில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 09:45.30 AM ]
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. [மேலும்]
காணாமல் போனோரை கண்டுபிடித்து தருவதாக கூறி பண மோசடி செய்த மூவர் கிளிநொச்சியில் கைது
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 09:28.06 AM ]
காணாமல் போனவர்களை விடுவிப்பதாக கூறி பொதுமக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த மூன்று பேர் கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
நாவற்குழி குடியேற்றத்துடன் படையினருக்கு தொடர்பில்லை: இராணுவப் பேச்சாளர்
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 09:00.30 AM ] []
யாழ்ப்பாணம் நாவற்குழியில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றத்துடன் இராணுவத்தினருக்கு தொடர்புகள் எவையும் இல்லை என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். [மேலும்]
மட்டக்களப்பு நாவலடியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 08:45.47 AM ] []
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி சுனாமி வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. [மேலும்]
சீன கம்பனியால் இலங்கை வர்த்தகர்கள் ஏமாற்றப்பட்டனர்
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 08:30.20 AM ]
உள்நாட்டு வர்த்தகர்கள் சிலர் சீன கம்பனி ஒன்றினால் ஏமாற்றப்பட்டதாக, இலங்கையில் உள்ள சீன தூதரகத்துக்கு முறைபாடு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக